Pages

Thursday, June 02, 2011

19 எதிர் நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு–Biography of VanduMama

நேற்று நண்பர் ஷிவ் அவர்கள் மாடஸ்டி பற்றிய ஒரு சுவையான பதிவு இட்டு இருந்தார். அந்த பதிவை படிக்கையில் அது குறித்த சுவையான பின்னணி தகவல்கள் நினைவுக்கு வந்தது. அதனை பின்னூட்டமாகவும் தெரிவித்தேன். அதன் பிறகே இந்த பதிவை பற்றிய எண்ணம் எழுந்தது. எப்போது காமிக்ஸ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேனோ, அப்போதிலிருந்தே எனக்கு பலவிதமான கற்பனைகள் தோன்றும் - கதைகளின் பின்னணி பற்றி. உதாரணமாக ராணி காமிக்ஸில் மரக்கோட்டை என்று ஒரு கதை வரும் (ஒற்றர் படைத்தலைவர் கிட் கார்சன் ஹீரோ). அந்த கதையை எழுதியதன் பின்னணி என்ன? ஒரிஜினல் கதையில் ஏதாவது மாற்றங்கள் செய்தார்களா? என்றெல்லாம் கேள்விகள் வரும். ராணி காமிக்ஸ் எடிட்டரை நேரில் சந்தித்தபோது இவ்வாறான பல கேள்விகளை கேட்டேன்.

இந்த பின்னணி விவரங்களை தெரிந்து கொள்ளும் ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளிலேயே இதன் தீவிரம் அதிகரித்தது. அதன் காரணம் தற்போதைய டிவிடிக்களில் வரும் டைரக்டர்ஸ் கட் மற்றும் பிகைன்ட் தி சீன்ஸ் காட்சிகள். அதனாலேயே தற்போது தீவிர வாசிப்பு குறைந்த நிலையிலும், முக்கியமான எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் ஒரே மூச்சில் படித்து விடுகிறேன். சமீபத்தில் படித்தவை முதலாளி (மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் சுந்தரம் அவர்களின் வரலாறு), எடிட்டர் எஸ்.ஏ.பி (குமுதம் எடிட்டரின் வாழ்க்கை சம்பவங்கள்), போராட்டங்கள் (எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் சுய சரிதம்) போன்றவை. இவற்றை எல்லாம் படிக்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக படித்த திரு வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு நினைவுக்கு வந்தது (மேலே குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் வானதி பதிப்பகம் வெளியிட்டவை) . பெரும்பாலான வாசகர்களுக்கு வாண்டுமாமா அவர்களின் சுயசரிதை குறித்து விவரங்கள் தெரியாதாகையால் அதனையே ஒரு பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவே இந்த பதிவு.

தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாகிய திரு வாண்டுமாமா  (எ) கௌசிகன் (எ) திரு வி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் பல புனைப்பெயர்களில் எழுதி இருக்கிறார். அவரை பற்றி மேலதிக விவரங்களுக்கு கீழ்க்கண்ட பதிவுகளை படிக்கவும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.....: வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு புத்தகமாக வந்துள்ளது என்ற தகவல் வந்தவுடனே உடனடியாக வானதி பதிப்பகம் சென்று அந்த புத்தகத்தை வாங்கி, வரும் வழியிலேயே பாதி படித்தும் விட்டேன். மீதி புத்தகத்தை படிக்க டிஸ்டர்பன்ஸ் இல்லாத இடம் தேடி பின்னர் அலுவல் நிமித்தமாக ஒருவரை சந்திக்கவேண்டிய அப்பாயின்ட்மென்ட் நினைவுக்கு வந்தது. உடனே அந்த அலுவலகத்திற்கு சென்று ரிஷப்ஷனிலேயே அமர்ந்து முழு புத்தகத்தையும் முடித்துவிட்டேன். அவ்வளவு ஆர்வம் மற்றும் சுவாரஸ்யம். இத்துணை வேகமான வாசிப்பிற்கு மற்றுமொரு காரணமும் கூறலாம். அதாவது தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்தவராகிய வாண்டுமாமா அவர்களின் பின்னணியும், கதை காரணிகளும் எனக்கு தேவைப்பட்டது. அதுவுமில்லாமல் என்னுடைய சிறுவயது தோழரின் வாழ்க்கை பற்றிய தேடலும் ஒரு தீவிர ஆர்வத்தை கிளப்பியது (சிறு வயது தோழர் என்பது அவருடைய எழுத்துக்களை).

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சுயசரிதை எதிர் நீச்சல் என்ற பெயரில் வந்துள்ளது. சிறு வயது முதலே போராட்டங்களை மட்டுமே கண்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றிற்கு இது ஒரு பொருத்தமான பெயரே. இந்த புத்தகம் சிறுவர் இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. ஒரு வாசிப்பின் பிறகு இந்த புத்தகத்திற்கு திரு மணியம் செல்வம் அவர்கள் வரைந்துள்ள அட்டைப்படம் மிகவும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

எதிர்நீச்சல் - கௌசிகன் / வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு - வானதி பதிப்பகம் வெளியீடு - சிறுவர் இலக்கியத்தின் தந்தையின் வரலாறு

Edhirneechchal Cover

இந்த புத்தகத்தின் ஆரம்ப பக்கங்கள் படிப்பதற்கு மிகவும் சுவையானதாக இருக்கிறது. குறிப்பாக வாழ்க்கை வரலாறு குறித்த வாண்டுமாமா அவர்களின் பொதுவான கருத்தும், அதையும் மீறி இந்த புத்தகத்தை இவர் எழுதியதின் காரணமும். முன்னுரையையே ஒரு அழகான சிறுகதைக்கான நேர்த்தியுடன் அமைத்திருக்கிறார் தமிழின் மிகச்சிறந்த கதை சொல்லி. மரியாதை தெரிந்த மனிதர் என்பதால் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும்கூட தன்னுடைய பத்திரிக்கையுலக முதலாளிக்கே அர்ப்பணம் செய்து தன்னுடைய மன வெளிப்பாட்டினை தெளிவுபடுத்துகிறார்.

EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Credits Page EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Intro Page 5 Dedication EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Intro Page 1
EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Intro Page 2 EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Intro Page 3 EdhirNeechchal VanduMama's AutoBiography Vanathy Publishers Intro Page 4

தன்னுடைய இந்த வாழ்க்கை வரலாற்றில் இவருடைய சிறுவயது நினைவுகளுடன் பல சுவாரஸ்யமான சம்பவங்களையும் சுவைபட அளித்துள்ளார் வாண்டுமாமா. தமிழக சினிமா வரலாற்றில் முக்கியமான இரு பெரும் புள்ளிகளை சந்தித்தது (நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்), பல்வேறு சினிமா நட்சத்திரங்களை சந்தித்ததின் பின்னணி, ஒவ்வொரு சந்திப்பிலும் நடந்த சம்பவங்கள் போன்றவை தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண்டுடனே சிவாஜி கணேசன் அவர்கள் இவரை சந்திக்க பேருந்து நிலையம் வரை ஓடி வந்ததின் பின்னணி ஒரு சிறப்பான சிறுகதைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளது.

இதனையும் தவிர்த்து விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் எம்.ஜி.ஆர் அவர்கள் இவரை முதலில் சந்தித்ததின் பின்னணியில் இருக்கும் கதை மற்றொரு  ஹைக்கூ. வாண்டுமாமா அவர்களும் அவருடைய சகா ஒருவரும் எம்.ஜி.ஆரை பேட்டி காண ஒரு நாள் மதிய வேளையில் செல்கின்றனர். வாண்டுமாமாவின் சகாவை மட்டும் மதிய உணவிற்கு அழைக்கிறார் எம்.ஜி.ஆர். விருந்தோம்பலில் சிறந்தவர் என்று அழைக்கப்படுபவரும், ஊருக்கெல்லாம் அன்னமிட்டவர் என்று அறியப்படுபவரும் ஆகிய எம்.ஜி.ஆர் ஏன் இப்படி செய்தார் என்பது ...... ஹூஹும்ம்ம் அதையெல்லாம் இங்கே சொல்வதாக இல்லை, தயவு செய்து இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதனை தவிர நாம் எல்லாம் நன்கறிந்த பூந்தளிர் புத்தகம் உருவானதின் பின்னணி குறித்த தகவல்கள் சுவையோ சுவை. தன்னுடைய வாழ்வில் நடந்த அநீதியையும் ஒரு சுவாரஸ்யமான  சம்பவமாகவே தொகுத்து உள்ளார் வாண்டுமாமா. இது போன்ற பல சம்பவங்கள் இந்த புத்தகத்தின் சிறப்பு.

சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி திரு வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு – எதிர் நீச்சல் - பூந்தளிர் புத்தகத்தின் பின்னணி

Edhirneechchal Page 213

இந்த புத்தகத்தின் வாயிலாகவே நான் ஊகித்து வைத்திருந்த (மூன்றாம் நபர் தகவல்கள் மற்றும் பல புத்தக குறியீடுகள்) அனைத்துமே கிட்டத்தட்ட உண்மை என்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக வாண்டுமாமா என்கிற இவரது புகழ் பெற்ற பெயரை கொண்டு "பாண்டுமாமா" என்ற பெயரில் எழுதி ஊரை எமாற்றப்பார்த்த ஒரு மோசடிப்பேர்வழியைப்பற்றியும், பணம் எத்தகைய காரியங்களை செய்யும் என்பதை இரண்டாம் முறையாக பூந்தளிர் நிறுத்தப்பட்டபோது நடந்த சம்பவங்களும் விளக்குகின்றன. அதே சமயம் திரு பாய் அவர்கள் மீது இவர் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் கண்கூடாக தெரிகின்றது. அவரின் மறைவுக்கு பிறகு அவரது வாரிசுகள் இவரிடம் நடந்துகொண்ட முறை பத்திரிக்கை துறையில் கண்ணியத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே விளங்கும்.

திரு வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு – எதிர் நீச்சல்-  தன்னுடன் பணிபுரிந்த ஓவியர்களைப்பற்றி வாண்டுமாமா அவர்கள்

Edhirneechchal Page 239

இதனை தவிர்த்து ஒவ்வொரு இதழிலும் அவருடன் பணிபுரிந்த ஓவியர்களை பற்றிய அவரின் பார்வையும், அவரது பத்திரிக்கையுலக மற்றும் தனிப்பட்ட நண்பர்களை பற்றிய அவரின் பார்வையில் இருந்தும் வாண்டுமாமா என்கிற ஒரு வளர்ந்த குழந்தையை மட்டுமே காண முடிகிறது. ஒவ்வொரு முறை காயப்பட்ட போதும், அந்த காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன்னுடைய வழியில் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார் வாண்டுமாமா அவர்கள்.

சிறுவர் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி பத்திரிக்கை உலகில் இன்று காலடி எடுத்து வைக்கும் / வைத்த / வைக்கப்போகும் அனைவருமே படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இந்த எதிர் நீச்சல். தனக்கு ஏற்பட்ட சோதனைகளை மீறி ஒரு மனிதன் எவ்வாறு ஜெயிக்க முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமே இந்த எதிர் நீச்சல். கண்டிப்பாக உங்களது நண்பர்களோ/உறவினர்களோ/தெரிந்தவர்களோ பத்திரிக்கை உலகில் இருந்தால் அவர்களை எழுவது ருபாய் கொடுத்து இந்த மேனேஜ்மென்ட் கோர்ஸ்'ஐ படிக்க சொல்லுங்கள் - கண்டிப்பாக அவர்கள் முன்னேற இந்த கோர்ஸ் (புத்தகம்) உதவும்.

திரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: இந்த புத்தகம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பத்திரிக்கை துறையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அழகாக விளக்கியது. ஆனால் கடந்த பதினாறு வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் மேலும் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன (பூந்தளிர் பத்திரிக்கை மறுபடியும் வெளிவந்தது, சில பழைய புத்தகங்கள் பதித்தது இதர, இதர). ஆகையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகதையோ அல்லது உங்களின் கதைகளின் பின்னணியில் இருக்கும் சம்பவங்களை பற்றிய ஒரு புத்தகத்தையோ எதிர்பார்க்கிறோம். உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே? சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே?  கண்டிப்பாக பல நூறு வாசகர்கள் இவற்றை விரும்பி வாங்கி படிப்பார்கள். ஒரு முறை யோசியுங்களேன்?

தொடர்புடைய சார் பதிவுகள்: Suggested Reading

19 comments:

  1. என்னை கவர்ந்த ஒரு பதிவில் மீதபஸ்ட்

    ReplyDelete
  2. இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:எதிர் நீச்சல்

    ReplyDelete
  3. ஹாய் விஷ்வா,
    சுவையான இந்த பதிவு, "எதிர்நீச்சல்" புத்தகத்தினை பற்றிய கனவுக்கு அடிகோலியிருக்கிறது :). இந்த புத்தகம் இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு இனிய வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  4. //உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே?//


    ரிபீட்டேய்...,

    ReplyDelete
  5. //குறிப்பாக மேலே சட்டை எதுவும் அணியாமல் வெறும் துண்டுடனே சிவாஜி கணேசன் அவர்கள் இவரை சந்திக்க பேருந்து நிலையம் வரை ஓடி வந்ததின் பின்னணி ஒரு சிறப்பான சிறுகதைக்குரிய அம்சங்களை கொண்டுள்ளது. //

    இதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறது

    ReplyDelete
  6. //சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த சுயசரிதை எதிர் நீச்சல் என்ற பெயரில் வந்துள்ளது//

    அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  7. பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ? (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)

    ReplyDelete
  8. //அப்படியென்றால் அநேகமாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன்//

    இன்னமும் பல பிரதிகள் விற்பனைக்கு உள்ளன. உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள் வாங்கி அனுப்புகிறேன்.

    //பாண்டுமாமா என்பவர் ஜேம்ஸ் பாண்டு மேல் கொண்ட அதீத காதலால் பாண்டு என்றும் ஒரு பாசத்தால் மாமா என்று சேர்த்து பெயர் வைத்து இருப்பாரோ? (ஆனால் எனக்கு பாண்டு மாமா பற்றி ஒன்றுமே தெரியாது)//

    இப்போது உங்களுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறேன். இந்த புத்தகத்தின் சில பக்கங்கள் (குறிப்பாக பாண்டு மாமா பற்றி) படித்து ரசியுங்கள்.

    ReplyDelete
  9. விஸ்வா!
    வாண்டுமாமாவை பற்றிய எனது பதிவின் போது நிறைய தகவல்களை 'எதிர்நீச்சலில்' இருந்துதான் பெற்றேன். தமிழ் சிறுவர் இலக்கிய உலகின் சிற்பியை பற்றி அவருடைய எழுத்துகளின் மூலமே அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்புதான் 'எதிர்நீச்சல்'!

    ReplyDelete
  10. கடலில் பேனாவின் துணைகொண்டு புத்தகங்களின் மேலே எதிர்நீச்சல் போட்டு ஒரு பயணம் - அற்புதமான ஓவியம். இதுவே ஒரு ஹைக்கு கவிதைதான் பாஸ். ம.செ பின்னி விட்டார்.

    இந்த படமே பல அர்த்தங்களை சொல்கிறதே.

    ReplyDelete
  11. இந்த பாண்டுமாமாவிற்க்கும் தேவக்கோட்டை பஞ்சுநாதன் என்பருக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

    பார்வதி சிதிரக்கதைகளின் கடைசி சில புத்தகங்களில் இந்த பஞ்சுமாமாவின் கைவண்ணத்தை கண்டு இருக்கிறேன்.

    சாண்டோவுக்கு ஒரு சவால் - பாண்டு மாவின் புதிய சாகசம் என்று கூட ஒரு கதை வந்ததே?

    ReplyDelete
  12. //திரு வாண்டுமாமா அவர்களுக்கு ஒரு சிறிய கோரிக்கை: இந்த புத்தகம் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பத்திரிக்கை துறையில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அழகாக விளக்கியது. ஆனால் கடந்த பதினாறு வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் மேலும் பல சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன (பூந்தளிர் பத்திரிக்கை மறுபடியும் வெளிவந்தது, சில பழைய புத்தகங்கள் பதித்தது இதர, இதர). ஆகையால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகதையோ அல்லது உங்களின் கதைகளின் பின்னணியில் இருக்கும் சம்பவங்களை பற்றிய ஒரு புத்தகத்தையோ எதிர்பார்க்கிறோம். உதாரணமாக பலே பாலு கதைகளின் பின்னணியில் இருக்கும் விஷயங்கள், திகில் தோட்டம் எழுத உங்களுக்கு வினையூக்கியாக இருந்த அந்த ஆங்கிலப்பப்டம் என்று பல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே? சிறுவர் இலக்கியம் மட்டுமின்றி உங்களின் மற்ற புதினங்களாகிய ஜுலேகா, சுழிக்காற்று, சந்திரனே சாட்சி போன்ற கதைகளின் பின்னணயில் நடந்த சம்பவங்கள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கும். அவற்றை உலகம் அறியச் செய்யலாமே? கண்டிப்பாக பல நூறு வாசகர்கள் இவற்றை விரும்பி வாங்கி படிப்பார்கள். ஒரு முறை யோசியுங்களேன்? //

    கண்டிப்பாக வாண்டுமாமா அவர்கள் மற்றுமொரு புத்தகம் எழுத வேண்டும்.

    ReplyDelete
  13. Thanks for the info about the biography. it seems to be a wonderful read. waiting to lay my hands on this.

    ReplyDelete
  14. it is the 4th post in 7 days. am not even able to comment on all of them.

    keep it up.

    ReplyDelete
  15. I luv Vandumama to da core. If I am able to read comics and if I am able to have a different taste, he is one of da major influences I have ever had in my childhood. Long live vandumama !!!

    ReplyDelete
  16. நண்பரே!
    " வாண்டு மாமா" அவர்கள் மேல் உயிரையே வைத்து இருக்கிறீர்கள், என்று கூறினால் அது மிகையல்ல, வாய்ப்பு

    கிடைக்கும்போதெல்லாம் "வெளுத்து " வாங்கி விடுகிறீர்கள்." எதிர்நீச்சல்" புத்தகத்தை மிக சுவரசிமாக படிக்க,படிக்க ஆர்வமூட்டும் வகையில் , எழுதி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் . மேலும் அச்த்தலான் பல செய்திகள் சொல்லபட்டிருப்பதும், குறிப்பாக"ஓவியர்கள்" பற்றி எழுதி இருப்பது மிகுந்த சந்தோசத்தை தருகிறது

    நிச்சயமாக எல்லோரும் படிக்கவேண்டிய புத்தகம்தான் பதிவுக்கு நன்றி

    அன்புடன்
    ஹாஜா இஸ்மாயில்

    ReplyDelete
  17. // காயத்தை உண்டக்கியவருக்கு தீங்கு நினைக்காமல் தன்னுடைய வழியில் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார் //

    அதனால் தானோ அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளார்
    .

    ReplyDelete
  18. இதெல்லாம் படிக்க ஆவலாகவே இருக்கிறது

    ReplyDelete
  19. my childhood days i remember ....... great and amazing post.... thanks vishwa sir........DR.SRIGANESH

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails