Pages

Monday, January 16, 2012

12 காமிக்ஸ் கிளாசிக்ஸ் #26: கொலைகாரக் கலைஞன் Comics Classics No 26: Kolaikarak Kalaignan

Dear ComiRades,

இந்த வருடம் தமிழ் காமிக்ஸ் உலகின் வரலாற்றில் மறக்க முடியாததொரு வருடமாக இருக்கப்போவதாக எடிட்டர் எஸ்.விஜயன் அவர்கள் அளித்த நம்பிக்கையோடு ஆரம்பித்து இருக்கிறது. பல அவநம்பிக்கைவாதிகளின் நம்பிக்கையை பொய்ப்பிக்கும் வகையில் சொன்னது மாதிரியே ஜனவரியில் புத்தக கண்காட்சியில் லயன் கம்பேக் ஸ்பெஷல் இதழை விற்பனைக்கு கொண்டு வந்து சாதித்துக் காட்டியும் விட்டார். இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஜனவரி பத்தாம் தேதி முதல்தான் விற்பனைக்கு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தை நான்கு நாட்கள் முன்னரே கொண்டுவந்ததோடில்லாமல், பல பிரச்சினைகளை தாண்டி, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்து இந்த பொங்கலை காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சுவையான பொங்கல் திருவிழாவாக மாற்றி உள்ளார்.

“கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு கொடுக்கும்” என்கிற பழமொழிக்கேற்ப, மார்ச் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழையையும் இந்த புத்தக கண்காட்சியிலேயே குறுகிய கால அவகாசத்தில் வெளியிட்டு (ஜனவரி பதிமூன்றாம் தேதி) அசத்தியும்  விட்டார். சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்துள்ள இந்த கொலைகார கலைஞனை பற்றிய ஒரு பார்வையே இந்த பதிவு.

எந்த ஒரு பணிக்குமே ஆரம்பம் மிகவும் முக்கியமானது. இப்போது ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறிக்கொண்டு இருப்பதற்குமே ஆரம்பம் சரியாக அமையாததே காரணம். ஆனால் முதல் முதலாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் காமிக்ஸ் இதழ் நாற்பது வருடங்களை கடந்து இன்றும் வெற்றி நடை போடுவதற்கு மூன்று ஈடிணையற்ற சாகச வீரர்களே காரணம் என்று சொன்னால் அது மிகையன்று. முத்து காமிக்ஸ் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தூண்களாக இருந்து ஆரம்பகால வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் மூன்று காமிக்ஸ் ஹீரோக்கள் (இரும்புக்கை மாயாவி, துப்பறியும் ஜானி நீரோ மற்றும் C.I.D. லாரன்ஸ் + ஜூடோ டேவிட்). இவர்களை முத்து காமிக்ஸின் த்ரி மஸ்கட்டியர்ஸ் என்று கூறினாலும் அது பொருத்தமான ஒன்றே

. Muthu Comics Banner

Classicsஇங்கிலாந்தில் ஃப்ளீட்வே என்கிற நிறுவனம் 1967 ஆம் ஆண்டு இரண்டு தனிப்பட்ட காமிக்ஸ் புத்தகங்களை ஆரம்பித்தது. ஒன்று சீக்ரெட் ஏஜென்ட் சீரிஸ் எனவும் (C.I.D. லாரன்ஸ் & ஜூடோ டேவிட் + ஜானி நீரோ)  மற்றது சூப்பர் ஹீரோ சீரீஸ் (இரும்புக்கை மாயாவி + ஸ்பைடர்) எனவும் பெயரிடப்பட்டு வெளிவந்தது. ஒவ்வொரு ஹீரோக்கள் கதை வரிசையிலும் பதிமூன்றே பதிமூன்று கதைகள் வந்தாலும் (மொத்தம் 52 கதைகள்) அவை இன்றளவும் மிகவும் சிலாகிக்கப்பட்டு ரசிக்கப்படுகின்றன. இதில் ஸ்பைடர் கதைகளைத்தவிர பாக்கி மூன்று ஹீரோக்களின் கதைகளை (39) பிரதானமாக கொண்டு முத்து காமிக்ஸ் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸின் ஆரம்ப கால ஹீரோக்களின் சாகசங்கள் பிற்காலத்தில் ஒரு கல்ட் கிளாசிக் அளவிற்கு புகழ் பெற்று விளங்கிவிட்டது. இன்னமும் ஆரம்ப கால முத்து காமிக்ஸ் வாசகர்கள் (முத்து விசிறி, BN_USA, ஹாஜா இஸ்மாயில் போன்றோர்) இந்த மூன்று ஹீரோக்களின் ஆரம்ப கால புத்தகங்களைப்பற்றியே சிலாகித்து பேசிக்கொண்டு இருப்பது இன்றைய வாசகர்களுக்கு வேண்டுமென்றால் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கலாம். ஆனால் அமிர்த்தத்தின் ருசி கண்டவர்களே அதனைப்பற்றி கூற இயலும். மற்றவர்களுக்கு அமிர்தம் என்னவென்பது மற்றவர் சொல்லக் கேள்வியே அன்றி நேரிடை அனுபவம் கிடையாதல்லவா?

இவ்வாறாக முத்து காமிக்ஸின் ஆரம்ப கால இதழ்கள் புகழ் பெற்று,Comics Classics Logo தேடப்படுகின்ற பொருளாக இருப்பதைக்கண்ட சில பல "களத்தில் இறங்கி வேலை செய்கின்ற" போலி காமிக்ஸ் ரசிகர்கள், இந்த ஆரம்ப கால இதழ்களை பழைய புத்தக கடைகளிலோ அல்லது மற்ற விவரமறியாத காமிக்ஸ் ரசிகர்களிடமிருந்தோ பெற்று, அவற்றை கொள்ளை விலைக்கு விற்கவும் ஆரம்பித்தனர். இவற்றை தடுக்கவும், மறுபடியும் இந்த இளைய தலைமுறைக்கு விண்டேஜ் காமிக்ஸ் ஹீரோக்களை மறு அறிமுகம் செய்யவும் ஆரம்பிக்கப்பட்டதே காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசை. வருடத்திற்கு நான்கு புத்தகங்கள் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வரிசையில் இப்போது இந்த கொலைகாரக் கலைஞன் இதழுடன் மொத்தம் 26 புத்தகங்களே வந்துள்ளது.

இதுவரையில் வெளிவந்துள்ள இந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களின் விவரப்பட்டியல் இங்கே தொகுப்பட்டுள்ளது. இந்த புத்தக வரிசையில் கடைசியாக வந்த மூன்று புத்தகங்களே இப்போது கைவசம் விற்பனைக்கு உள்ளதென்பது குறிப்பிடத் தக்கது. ஆகையால் அவற்றையும் விரைவாக செயல்பட்டு கைவசப்படுத்துங்கள்.

No முதல் கதை நாயகன் இரண்டாவது கதை நாயகன்
1 பாதாள நகரம் இரும்புக்கை மாயாவி டாக்டர் டக்கர் ஸ்பைடர்
2 சதிகாரர் சங்கம் ஜானி நீரோ சிறைப் பறவைகள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
3 பாம்புத் தீவு இரும்புக்கை மாயாவி கடத்தல் குமிழிகள் ஸ்பைடர்
4 பழி வாங்கும் பாவை டெக்ஸ் வில்லர் கொலைக் கரம் ஜானி நீரோ
5 கல் நெஞ்சன் ஸ்பைடர் இரும்புக் கை மாயாவி இரும்புக்கை மாயாவி
6 ஃபிளைட் 731 CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  ஜானி In லண்டன் ஜானி நீரோ
7 இமயத்தில் மாயாவி இரும்புக்கை மாயாவி சிறுபிள்ளை விளையாட்டு ஸ்பைடர்
8 மஞ்சள் பூ மர்மம் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  துருக்கியில் ஜானி நீரோ ஜானி நீரோ
9 கொள்ளைகார பிசாசு இரும்புக்கை மாயாவி
10 கடத்தல் முதலைகள் ஜானி நீரோ தவளை எதிரி ஸ்பைடர்
11 ஃபார்முலா X-13 CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  திசை மாறிய கப்பல்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
12 நியூயார்க்கில் மாயாவி இரும்புக்கை மாயாவி மர்மத் தீவு ரோபோ ஆர்ச்சி
13 கொலைப்படை ஸ்பைடர் நடுநிசி கள்வன் இரும்புக்கை மாயாவி
14 ஜானி In ஜப்பான் ஜானி நீரோ தலை கேட்ட தங்கப்புதையல் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
15 கொலைகாரக் கலைஞன் ஜானி நீரோ விண்ணில் மறைந்த விமானங்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
16 பழி வாங்கும் பொம்மை ஸ்பைடர் கொள்ளைக்கார மாயாவி இரும்புக்கை மாயாவி
17 மைக்ரோ அலைவரிசை 848 ஜானி நீரோ தங்க வேட்டை ரோபோ ஆர்ச்சி
18 பாதாளப் போராட்டம் ஸ்பைடர் பறக்கும் பிசாசு இரும்புக்கை மாயாவி
19 மர்மத் தீவில் மாயாவி இரும்புக்கை மாயாவி திகிலூட்டும் நிமிடங்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
20 ஃபார்முலா திருடர்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட்  தங்க விரல் மர்மம் ஜானி நீரோ
21 யார் அந்த மினி ஸ்பைடர்? ஸ்பைடர் இயந்திர தலை மனிதர்கள் இரும்புக்கை மாயாவி
22 நாச அலைகள் இரும்புக்கை மாயாவி எத்தனுக்கு எத்தன் ஸ்பைடர்
23 மூளைத் திருடர்கள் ஜானி நீரோ காற்றில் கரைந்த கப்பல்கள் CID லாரன்ஸ் + ஜூடோ டேவிட் 
24 விண்வெளி கொள்ளையர் இரும்புக்கை மாயாவி
25 களிமண் மனிதர்கள் இரும்புக்கை மாயாவி
26 கொலைகார கலைஞன் ஜானி நீரோ

இப்போதைக்கு நம்முடைய தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே அதிக முறை ரீபிரின்ட் செய்யப்பட்ட காமிக்ஸ் கதையாகியKolaikarak Kalaignan கொலைகாரக் கலைஞனை பற்றி பார்ப்போம். இன்னமும் பல காமிக்ஸ் கதைகள் ஒருமுறை கூட ரீபிரின்ட் செய்யப்படாத நிலையில் (நயாகராவில் மாயாவி) இந்த கதையை மூன்றாவது முறையாக ரீபிரின்ட் செய்யப்படுகிறது என்றால் அந்த கதையில் வித்தியாசமாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டுமல்லவா? அப்படி என்ன உள்ளது என்பதை இங்கு அளவளாவுவோம். அதற்க்கு முன்பாக நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னராகிய நம் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமான முத்து விசிறி அவர்களின் இந்த கொலைகாரக் கலைஞன் பற்றிய விமர்சன பதிவை ஒருமுறை படித்து விட்டு வாருங்கள். அதுவரை ஒரு சிறிய விளம்பர இடைவேளை. கதையை தவிர இந்த புத்தகத்தின் தலைப்பில் இருக்கும் நுண்ணரசியலை அவர் ஆராய்ந்து இருக்கும் பாங்கே அலாதி.அந்த அரசியலையும் இப்போது இருக்கும் அரசியலையும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள் மக்களே.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Cover Comics Classics No 26 Kolaikara Kalaignan Dated Jan 2012 Story 1st Page
Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Cover Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story 1st Page

இந்த கதையை பற்றி நம்முடைய பார்வையை படிப்பதற்கு முன்பாக முத்து விசிறி அவர்கள் தங்களுடைய பதிவில் இரத்தின சுருக்கமாக ஒரே ஒரு பத்தியில் இந்த புத்தகத்தை பற்றியும், கதையை பற்றியும் கூறி இருப்பதை ஒரு முறை படித்து விடுங்கள்: “Accidental deaths take place one after other in France. In Orleans, it was Pierre the postman, then it was Hans clipper the newspaper reporter and then in Naples, it was father Roger. There was no connection between these "accidental" deaths, except they all worked for Britain against the Nazis in the second world war and the timing of the deaths coincide with the visit of Kohli circus to the city where they lived & died. British intelligence agency gets interested in this and they suspect Sir George, who has access to the secret info about the agents. He vanishes mysteriously with those files. Johnny Nero was asked to follow Sir George, but Sir George himself is only a black mailed pawn in this deadly game. The trial leads to the manager of a wax museum who tries to kill Sir George and Johnny Nero by lighting fire to the wax exhibits. However the manager leaves a trail by way of a cloth worn by circus clowns. Johnny immediately closes on the next target who happens to be the mayor of Leon's where the circus is currently performing. Though he couldn't stop the killing of the mayor, he manages to nab the Kolaikaara Circus Kalaignan, Joseph Kranknen who was a ex-Nazi, who wants to take revenge on all the agents who worked against the Nazi Germany. Typical war time story, but with the twists and turns at every stage, it is really gripping. No wonder this got published in Muthu thrice”.

இதற்க்கு மேலும் நாம் கதையை விளக்கி கூற வேண்டுமா என்ன? எளிய ஆங்கிலத்தில் மிகவும் அருமையாக நமக்கெல்லாம் புரியும்படியாக கதையை விவரித்த முத்து விசிறி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஒரு காமிக்ஸ் கதை என்றால், அதுவும் சீரிஸ் ஆக வரும் ஒரு ஹீரோவின் கதை என்றால் அதில் ஹீரோவுக்கு ஒரு என்ட்ரி சாகசம் இருக்க வேண்டும், அவர் வருவதற்கு ஒரு பில்ட் அப் இருக்க வேண்டுமென்ற சராசரி காமிக்ஸ் நடையை கட்டுடைப்பு செய்த பின் நவீனத்துவ கதை இந்த கொலைகாரக் கலைஞன். ஆமாம், இந்த கதையில் ஹீரோவின் அறிமுகமே 28ஆம் பக்கத்த்தில் தான் நடக்கிறது. அதுவும் அலட்டல் இல்லாமல் ஆழ்கடலில் படமெடுத்துக்கொண்டு இருக்கும் இந்த அறிமுகம் சராசரி காமிக்ஸ் ஹீரோவுக்கு கொஞ்சம் புதியதே.(கிட்டதட்ட நம்முடைய டாக்டர் அணில் அவர்களின் நண்பன் படம் போன்றதே இந்த கதையும். நண்பன் படத்திலும் ஹீரோவுக்கு பன்ச் வசனம் இல்லை, அறிமுக சண்டை, என்ட்ரி சாங் இல்லை).

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 28: What an entry for the Hero, Well after 28 Pages into the story
Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 28

இந்த கதையை பற்றி இன்னமும் விலாவரியாக சொல்ல இயலும். ஆனால் சொன்னால் படிக்கும் ஆர்வம் குறைந்து போகுமோ என்ற எண்ணத்துடன் இந்த கதையில் என்னுடைய மனதை கவர்ந்த சில காட்சிகளை பற்றி கூறிவிடுகிறேன்.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 33 Kadal Nari

அதற்க்கு முன்பாக இந்த கதையைப் பற்றியும், ஜானி நீரோ பற்றியும் ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்: 1992ஆம் ஆண்டு. அம்பத்தூரில் இருக்கும் என்னுடைய பள்ளித்தோழன் செல்வம் வீட்டில் நாங்கள் எல்லோரும் Group Study செய்ய செல்வோம். அப்போது அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகில் இருந்த விநாயகா பழைய புத்தக கடையில் இரண்டு பாக்கெட் சைஸ் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்கு கிடைத்தது. இரண்டுமே அட்டை மற்றும் முதல் பக்கம் இல்லாமல் ஐந்தாவது பக்கத்தில் இருந்து இருந்தது. ஒன்றரை ருபாய் கொடுத்து இரண்டு புத்தகங்களையும் வாங்கிவிட்டேன். ஆனால் முதலில் படிக்கும்போது அவ்வளவாக சுவாரஸ்யப்படாத அந்த இரண்டு கதைகளின் ஹீரோ ஜானி நீரோ. பின்னர் வெகு நாட்கள் கழித்தே அந்த புத்தகங்கள் சதிகாரர் சங்கம் மற்றும் கொலைகாரக் கலைஞன் என்று தெரிந்துக் கொண்டேன். அதற்க்கு முன்பே ஓரிரு ஜானி நீரோ கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்த ஞாபகம் இருந்தாலும் எனக்கு என்று சொந்தமாக வாங்கிய முதல் ஜானி நீரோ கதைகள் இவையே. அதிலும் இந்த கொலைகாரக் கலைஞன் என்னை மிகவும் கவர்ந்தது. சொல்லப்ப்போனால் ஜானி நீரோ கதைகளில் அனைத்துமே என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக கொலைகாரக் கலைஞன் மற்றும் மைக்ரோ அலைவரிசை 848.

வழக்கமாக ஜானி நீரோ கதைகளுக்கு படம் வரைபவர் பாவ்லோவ் மாண்டெக்கி.Marcello Mastroianni இவர் ஜானி நீரோவை வரையும்போது பிரபல இத்தாலிய நடிகர் Marcello Mastroianniஐ மாடலாகக் கொண்டு வரைவார். ஆகையால் இவரின் கைவண்ணத்தில் வந்த ஜானி நீரோ கதைகள் அட்டகாசமான ஓவியத்தரத்தில் இருக்கும். ஆனால் மாதம் நான்கு கதைகள் வரவேண்டிய கட்டாயம் இருந்ததால், ஃப்ளீட்வே நிறுவனத்தால் ஒரு குறிப்பிட்ட கதையை ஒரே ஒரு கதாசிரியர் மற்றும் ஓவியரைக் கொண்டு முடிக்க முடியவில்லை. ஆகையால் வேறு வேறு ஓவியர்கள் ஒரு குறிப்பிட்ட கதைத் தொடரை வரைய ஆரம்பித்தார்கள். அப்படி வேறுபட்டு வந்து, ரெகுலர் ஆக இல்லாமல் ஓரிரண்டு கதைகளுக்கு மட்டுமே வரைந்தவர் ஓவியர் இஸ்டாக்கியோ செக்ரேல்ல(ஸ்).Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 52 In the Wax Museum

அதுவுமின்றி பதின்ம வயதின் முதல் படியில் அடியெடுத்து வைத்த எனக்கு, அந்த கதையில் ஸ்டெல்லாவை ஓவியர் இஸ்டாக்கியோ செக்ரேல்லே(ஸ்) வரைந்த விதம் மற்ற ஓவியர்கள் வரைந்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிகவும் கவர்ச்சியாக இருந்ததும் இந்த கதையை பிடிக்க ஒரு காரணம். பின்னர் மற்ற கதைகளை படிக்கும்போது அதில் ஸ்டெல்லாவின் கதாபாத்திரம் மிகவும் கண்ணியமாக வெளிப்படுத்தப்பட்டு இருந்தவிதம்,அந்த பாத்திரத்தின் மீது ஒரு விதமான மரியாதையையே  ஏற்படுத்தியது. அந்த விதத்தில் இந்த கதையின் ஓவியங்கள் மாறுபட்டு இருந்தாலும், இந்த கதையில் ஸ்டெல்லா மிகவும் Active ஆக செயல்பட்டு இருப்பார். குறிப்பாக ஒரு சீனில் ஜானி ஸ்டெல்லாவை "ஏன் இங்கு வந்தாய்?" என்று கடிந்துக்கொண்டு இருக்கும்போதே உடல் அசதி காரணமாக மயங்கி விழுவார். அப்போது ஸ்டெல்லா தாங்கி பிடிப்பார். இதையெல்லாம் மீறி எனக்கு பிடித்த மூன்று காட்சிகள் இங்கே தனித்தனியாக வெட்டப்பட்டு உள்ளன.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Page No 90 Stella Kissing Peter

பழனியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் அவர்களின் இணையதளத்தில் அவர் கடல்புறா பற்றி (சைட் பாரில்) ஒரு பத்தியில் இந்த காட்சியை பற்றி குறிப்பிட்டு இருப்பார். அதற்க்கு முன்பிருந்தே இந்த காட்சியை நாங்கள் விவாதித்து இருந்தோம், ஆனால் வேறு கண்ணோட்டத்தில். எண்பதுகள் மட்டும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பதின்ம வயது சிறுவர்களின் முக்கிய விவாதப்பொருளே ஸீ த்ரூ கேமிரா. அதாவது ஒரு பொருளை ஊடுருவி வெளிப்படையாக படமெடுக்கும் கேமிரா. நடிகை நதியா ஒரு படத்தில் S.V. சேகர் அவர்களை இந்த மாதிரி ஒரு கண்ணாடி அணிந்துக்கொண்டு பயமுறுத்துவார். நாங்கள் எல்லோரும் அப்போதே அந்த மாதிரி ஒரு கண்ணாடியைப்பற்றி விவாதிப்போம். எங்கள் செட்டில் "உஷார் பார்ட்டி" என்று பெயரெடுத்த ஜாகீர் ஹுசேன் இந்த மாதிரி ஒரு கண்ணாடி தன்னுடைய மாமாவிடம் இருப்பதாகவே சத்தியம் செய்தான். 

அதைப்போலவே ஒரு குறிப்பிட்ட காட்சியில் (எடிட்டர் கூட தன்னுடைய தளத்தில் இந்த காட்சியை விவரித்தது நினைவிருக்கலாம்), ஸ்டெல்லாவை பீட்டர் காப்பாற்றியவுடன் ஸ்டெல்லா நன்றியுணர்ச்சியுடன் முத்தமிட,நாணத்தால் பீட்டர் நெளிய, அந்த நாசூக்கான தருணத்தை ஓவியர் அற்புதமான முக பாவனைகளுடன் வெளிப்படுத்தி இருப்பார். வழக்கமான ஒரு துப்பறியும் கதையே என்றாலும், கதையின் விறுவிறுப்பான ஓட்டமும், தொய்வில்லாத நடையும் கதையை ஒரு Must-Read ஆக வெளிப்படுத்துகின்றன.

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Last Page: The Usual Happy ending with Col. Jacob and Nero asking for rest

Comics Classics Issue No 26 Kolaikara Kalaignan Issue Dated Jan 2012 Story Last Page

என்னிடம் இருக்கும் சொற்ப காமிக்ஸ் கலெக்ஷனில் இந்த இரண்டு புத்தகங்களுமே மிஸ்ஸிங். ஆகையால் இந்த அட்டைப்படங்களை கொடுத்துதவிய ஆபத்தான்தவன் திரு முத்து விசிறி அவர்களுக்கு நன்றி. இரண்டு அட்டைப்படங்களுமே வித்தியாசமாக ஆனால் அருமையாக இருக்கின்றன. முதல் படம் வந்த கால கட்டத்தில் ஒரு பெரிதும் பேசப்பட்ட அட்டைப்படமாக இருந்திருக்கக்கூடும். முதல் இதழை படித்தவர்கள் தகவலைப்பகிர்ந்தால் நலம்.

Muthu Comics Issue No 009 Kolaikaara Kalaignan Cover-Issue Dated Dec 1972 Muthu Comics Issue No 161 Kolaikarak Kalaignan Cover-Issue Dated Aug 1987
Muthu Comics Issue No 009 Kolaikaara Kalaignan Cover Muthu Comics Issue No 161 Kolaikarak Kalaignan Covers

இது ஃப்ளீட்வே நிறுவன இதழின் அட்டைப்படம். இதையையும் கொடுத்துதவியவர் முத்து விசிறி அவர்களே. ஆனால் அடுத்து இருக்கும் அட்டை (காமிக்ஸ் கிளாசிக்ஸ்) என்னிடமே இருக்கும் ஒன்று. கடைசியாக இருப்பது லயன் காமிக்ஸ் ஆபீசில் இருக்கும் ஒரிஜினல் அட்டைப்பட பெயின்ட்டிங் (நன்றி எடிட்டர் எஸ்,விஜயன்).

Fleetway Secret Agent Series No 05 Assassins Anonymous Cover – Issue Dated Mar 1967 Prakash Publishers - Comics Classics Issue No 15 – Kolaikarak Kalaignan – Issue Dated June 2004 Comics Classics Kolaikara Kalaignan Art Work by the Well Known artist Malaiyappan
Fleetway SA Sries No 05 Assasin Anonymous Cover CC 15-1 Kolaikaara Kalaigan Comics Classics Kolaikara Kalaignan Art Work

நாளையுடன் சென்னை புத்தக கண்காட்சி இனிதே முடிவடைகிறது. அநேகமாக நாளை நான் புத்தக கண்காட்சிக்கு செல்வேன் (என்றே நினைக்கிறேன்). ஆகையால் காமிரேட்டுகள் என்னை அங்கு சந்திக்கலாம். காமிக்ஸ் வாங்க நினைக்கும் காமிரேட்டுகள், குறிப்பாக இந்த கொலைகாரக் கலைஞன், நாளையே வந்து வாங்குவது நலம். இப்போதைக்கு இவ்வளவுதான் காமிரேட்ஸ். வழக்கம் போல உங்களுடைய  கருத்துக்களை, கமெண்ட்டுகளை பதிவு செய்திடுங்கள். தமிழில் டைப் செய்ய விரும்புவர்கள் இந்த லிங்க்’ஐ கிளிக் செய்து தமிழிலேயே டைப் செய்து கருத்தேற்றலாம்.

Thanks & Regards,

King Viswa.

12 comments:

  1. When MuthuFan visited me in the US many many years ago, he had given me a original Fleetway issue as a gift, and I have also read some more Fleetway stories online. The English versions were always bland and uninteresting compared to the Tamil translations of the Muthu comics staff. I wonder who it was who did the translation. Was it Mullai Thangarasan, or was it Mr. Soundarapandian himself?

    ReplyDelete
    Replies
    1. Translated by Mr Soundhara Pndian & Re phrased by Mullai Thangarasan.

      Delete
  2. எந்த ஒரு பணிக்குமே ஆரம்பம் மிகவும் முக்கியமானது. இப்போது ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி தடுமாறிக்கொண்டு இருப்பதற்குமே ஆரம்பம் சரியாக அமையாததே காரணம். ஆனால் முதல் முதலாக தமிழில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ் காமிக்ஸ் இதழ் நாற்பது வருடங்களை கடந்து இன்றும் வெற்றி நடை போடுவதற்கு மூன்று ஈடிணையற்ற சாகச வீரர்களே காரணம் என்று சொன்னால் அது மிகையன்று. முத்து காமிக்ஸ் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தூண்களாக இருந்து ஆரம்பகால வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் மூன்று காமிக்ஸ் ஹீரோக்கள் (இரும்புக்கை மாயாவி, துப்பறியும் ஜானி நீரோ மற்றும் C.I.D. லாரன்ஸ் + ஜூடோ டேவிட்). இவர்களை முத்து காமிக்ஸின் த்ரி மஸ்கட்டியர்ஸ் என்று கூறினாலும் அது பொருத்தமான ஒன்றே

    ReplyDelete
    Replies
    1. //முத்து காமிக்ஸ் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தூண்களாக இருந்து ஆரம்பகால வெற்றிக்கு வழி வகுத்தவர்கள் மூன்று காமிக்ஸ் ஹீரோக்கள் (இரும்புக்கை மாயாவி, துப்பறியும் ஜானி நீரோ மற்றும் C.I.D. லாரன்ஸ் + ஜூடோ டேவிட்). இவர்களை முத்து காமிக்ஸின் த்ரி மஸ்கட்டியர்ஸ் என்று கூறினாலும் அது பொருத்தமான ஒன்றே//

      well said.

      Delete
  3. nalla araychi pathivu. Sollathathaiyum ivvarudam nam vijayan sir seythu kalakki edukka pogirar enbathu migai alla. Nichayam this year our lion team rocks.

    ReplyDelete
  4. இத்தாலிய நடிகரைப் பார்த்தான் எங்கள் அல் பாசினோ மாதிரியும் இருக்கின்றது. :)

    பதிவிற்கு நன்றி விஷ்வா.

    ReplyDelete
  5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே !

    ReplyDelete
  6. Pls guide me how to purchase lion & muthu comics online\

    ReplyDelete
    Replies
    1. Kumar,

      Kindly visit our Editor S.Vijayan Sir's Blog: Editor S.Vijayan Sir's Blog

      Name of Account : PRAKASH PUBLISHERS

      Bankers : TAMILNAD MERCHANTILE BANK Ltd., Sivakasi Branch.

      Account Number : 003150050421782

      IFS Code : TMBL0000003

      You can make online transfers for payments in excess of Rs.300.

      Delete
  7. How can I purchase a copy of Comic classic No 27 தலை வாங்கிக் குரங்கு Tex Willer in Coimbatore. Help me out.

    ReplyDelete
  8. HI BROTHER

    I AM SEARCHING FOR நடுநிசி கள்வன் IRUMBUKAI MAYAVI COMICS. FOR LONG TIME. CAN I GET A COPY OF THIS. PLEASE.

    ReplyDelete

Dear ComiRade,

Kindly Spare a Moment to Leave Your Presence in this Blog By Adding Your Valuable Comments that Can Improve This Blog.

Always Give Due Importance To Others' Views & Never Ever Hurt Others Feelings / Point Of Views.

Do Not Request Anything That Gets Us into a Legal Tangle Such As Copy Righted Materials, Registered Products etc.

Strictly No PDF Requests.

Related Posts with Thumbnails